Thursday, April 28, 2011

உப்பின் நிறம் சிவப்பு !!!


மீன் பிடிக்க நாற்பது நாட்கள் தடை

மீன் இனம் காக்க சட்டமுண்டு

மீனவ இனம் காக்க தான்

இங்கு ஒன்றுமே இல்லை ........



ஒரு தமிழ் இனம் அழிந்தது

வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தோம்

அந்த இனத்தின் ஓலங்கள்

காதில் விழாதது போல் நடித்தோம் ........


இறையாண்மை நிலை நாட்ட

நம் ஆண்மை தொலைத்தோம்

எத்தனை காலம் வாழ போகிறோம்

இம்மாதிரியான பேரனர்த்தங்களுடன்.......




பொய்யாக பொத்தி கொண்டிருக்கும் காதுகளை மீறி

அவர்களின் ஓலங்கள் நம் காதில் விழ கூடும் ஓர் நாள்

அன்று நம் உணவில் இடும் உப்பின் நிறம்

சிகப்பாய் மாறி இருக்கலாம் !!!!!!!



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home