Monday, October 8, 2012

கொஞ்சம் கவிதை , நிறைய காதல் - 4


சாதாரண நாட்களில்


நிலா அழகு ..


உன்னுடன் அமர்ந்து பார்க்கையில் தான்

நிலா 'கொள்ளை' அழகு !!!!

_______________________________________________


உன்னுடைய முதல் கேள்விக்கு என் பதில்

காதல் என்று இருந்தது ....

உன்னுடைய இறுதி கேள்விக்கும் என் பதில்

காதல் என்பதாகவே இருக்கும் !!

__________________________________________________

போட்டியில் உன்னிடம் தோற்றால்



பத்து முத்தங்கள் தருவதாய் சொல்கிறாய் .



அடி பைத்தியகாரி ,



சும்மாவே தோற்பேன்



இதில் பரிசு தருகிறேன் என்கிறாய்



விடுவேனா ???



__________________________________________

சிரித்து கொண்டேயிரு !!



உன் சிரிப்பு சிதறல்களை பொறுக்கி



பசியாறி கொள்பவன் நான் !!!

______________________________________________


மழைகாலம் - சிறு குறிப்பு வரைக !!



தேர்வில் கேட்டிருந்தார்கள் .



உன் பெயரை



பத்து முறை எழுதிவிட்டு வந்தேன் !!!

__________________________________________________


என் இந்த வாழ்க்கை கட்டுரையின்



முன்னுரை



விளக்கவுரை



முடிவுரை



" நீ " !!







Friday, January 6, 2012

டிவிட்டர் சிறுகதைகள்

Twitamils-இல் கீச்சுகளில் சிறுகதை எழுதும் புது முயற்சி ....




என்னுடைய சிறுகதை உங்கள் பார்வைக்கு ....

http://twitamils.com/2011/12/17/tkss-1/

Twitamils

Twitamils-இல் என்னுடைய பக்கமும் , என்னுடைய கீச்சுகளும்:
http://twitamils.com/2011/12/22/alexxious/




இதற்காக பெரிதும் உதவிய நண்பர் பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!

நாகரிகம்...




சாப்பிட்டு முடித்தவுடன்


கை துடைக்க

முந்தானை நீட்டும் அம்மாவிடம்

மண்டியிட்டு மரணிக்கின்றன

நகரத்து "டிஷ்யு" நாகரிகம் !

கொஞ்சம் கவிதை , நிறைய காதல் - 3

1.

உன் கரம்கோர்த்து நடக்கும் தருணங்களில்


இந்த உலகம் மாறிவிடுகிறது

ஒரு நிழல்சூழ்ந்த நடைபாதையாய்.....


2.

உன் புன்னகையில் ஒளிந்திருக்கின்றன


என் இந்த வாழ்வின்

பரிசுகளும் பரிகாரங்களும் .....

Tuesday, September 20, 2011

கொஞ்சம் கவிதை , நிறைய காதல் - 2



உன்னை அழகி என அழைக்கலாம்


அமைதியானவள் என அழைக்கலாம்

அறிவாளி என அழைக்கலாம்

பூங்கொத்து என அழைக்கலாம்

மெல்லிய சிறகு என அழைக்கலாம்

அனைத்தையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டுமானால்

சுருக்கமாய் உன் பெயர் சொல்லியே அழைக்கலாம் !!!!

மழை.....

மழையை வெறுப்பதற்கு


நிறைய காரணங்கள் இருக்கின்றன

எனக்கு !!!!



மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவில் தான்

உயிர் தோழனின் தற்கொலை செய்தி

வந்து சேர்ந்தது ....



செல்லமாய் வளர்த்த ஜூலி

இறந்த பொழுது வீட்டிற்கு உள்ளேயும் வெளியும்

மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது .....



பெரு மழைக்கு பிறகான விடியலில் தான் தெரிந்தது

ரகசியமாய் நேசித்த ராஜி அக்காவும்

ஆதர்சமாய் பார்த்த பரமு அண்ணனும்

ஊர் விட்டு ஓடி போனது .....


மழை தூரி கொண்டிருந்த மதிய வேலையில் தான்

நீயும் நானும் பிரிந்து விடுவதென

பரஸ்பரம் முடிவு செய்தோம் .....



இப்படி காரணங்கள் நிறைய இருக்கின்றன

மழையை வெறுப்பதற்கு...

ஆனாலும் மழையின் முதல் துளி

என் மீது விழும் அந்த கணத்தில்

குழைந்து கரைந்து போகிறேன்

மண்ணென !!!!!!!



.