Saturday, September 1, 2007

மாற்றங்கள் ....

உன்னை முதல் முறை பார்த்த பொழுது
எனக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை

உன்னிடம் பேசிய பொழுது
என் கால்கள் பின்னி கோலம் போட வில்லை

நீ சிரித்த பொழுது முத்துக்கள் உதிரவில்லை
என் தொண்டைக்குள் எந்த பந்தும் சிக்கவில்லை

ஆனால் நீ சென்று வெகு நேரமாகியும்
அங்கேயே நின்று கொண்டிருந்தேன்


பிரமை பிடித்தவன் போல.......

ஒன்றை தவிர...

உறவுகள் தந்தாய்
ஏக்கங்கள் ஏற்றினாய்

கனவுகள் தந்தாய்
கண்களில் கலந்தாய்

உணர்வுகள் உணர்த்தினாய்
உயிரை உரித்தாய்

சிரிக்க சிலிர்க்க
நெகிழ நெருங்க

எல்லாம் செய்தாய்
காதலை தவிர.........

kaadalai thavira

மறைக்கவும் மறக்கவும் முடியாதவை ....

சிலந்திகளின் வலைகள் நிறைந்த பரணில்
துரு பிடித்த இரும்பு பெட்டியில்
ஒளித்து வைத்திருக்கிறேன்

உன் ஒற்றை பிளாஸ்டிக் கம்மலை
காய்ந்து போன மல்லிகை சரடை
ஒன்றாய் பார்த்த சினிமாவின் டிக்கெட்டை

எங்கே ஒளித்து வைப்பது

நம் முதல் ஸ்பரிசத்தையும்

அதை தொடர்ந்த ஈரமான முத்தத்தையும் .....







மௌனம் சம்மதமில்லை ...

மரணத்தை விட கொடுமையானது

உன் மௌனம் ......

சில நேரங்களில்

உன் மௌனம்

மயானங்களை விட

அதிகமாய் அச்சுறுத்துகிறது ......

நினைவின் சுவடுகள்...

மழை பெய்து கொண்டிருந்த அந்திம பொழுதில்
நீயும் நானும் பிரிவதேன்று
பரஸ்பரம் முடிவு செய்தோம்

பின்னொரு நாள் எதேச்சையாக
தாம்பரம்-கடற்கரை மின்வண்டியில்
நாம் சந்திக்கும் படி நேர்ந்தது

என் குடும்பம் பற்றி நீயும்
உன் குடும்பம் பற்றி நானும்
மேம்போக்காய் விசாரித்து கொண்டோம்

விடை பெரும் தருவாயில்
நீ என்னை பார்த்து கேட்டாய்
என்னை நினைப்பது உண்டா என்று ?????


விடை கூறமால் வந்து விட்டேன்.
உனக்கு எப்படி புரிய வைப்பது
காயங்களின் வலி வேண்டுமானால் மறையலாம்
அதன் வடுக்கள் மறையாது என்பதை .....


தனிமையில் .....

வழி துணை தேடி
விரல்களை நீட்டி
வாழ்கை பயணம் தொடர்கிறது .....

விரல் தொட எவரும் இல்லை
நீட்டிய விரல்கள் நீட்டிய படியே
கண்களில் இருந்து எட்டி பார்க்கும்
ஒரு கண்ணீர் துளி .............