Monday, July 25, 2011

எனக்குப் பிடித்த பாரதி கவிதை !!

தேடிச் சோறு நிதந்தின்று – பல


சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ



கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே



நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோபட்ட - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே



-மகாகவி சுப்ரமணிய பாரதி



மரணம் வரமே !!!!!


முற்றுப் பெறாத இரவுகள்
முற்பகலில் கொடுங் கனவுகள்
முப்பொழுதும் வழிந்தோடும் கண்ணீர்.....

சில சமயங்களில்
இயலாதவனின் வாழ்வில்
மரணம் என்பது சாபம் அல்ல
வரமே !!!!!